காரியாபட்டி அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை

காரியாபட்டி அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே கோவில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது இலுப்பைக்குளம் கிராமம். இங்கு திருவேட்டை அய்யனார் கோவில் உள்ளது.

அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கு இருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவர்களை தேடிவருகின்றனர்.

2 உண்டியல்களிலும் காணிக்கையாக ரூ. 10 ஆயிரம் இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com