காரியாபட்டியில் கத்தி முனையில் வழிப்பறி- 3 வாலிபர்கள் கைது

காரியாபட்டியில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

காரியாபட்டி அருகே உள்ள வையம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது30). இவர், மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

இலுப்பைகுளம் பகுதியில் வந்தபோது 3 பேர் வழி மறித்துள்ளனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரபாகரன் வைத்திருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

இது குறித்து காரியாபட்டி போலீசில், பிரபாகரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இலுப்பை குளம் சுரேஷ் (19), முத்துக் குமார் (19), வேப்பங்குளம் மணிகண்டன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com