காரியாபட்டி அருகே வேன் மோதி விவசாயி பலி

காரியாபட்டி அருகே வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

காரியாபட்டி:

காரியாபட்டி அருகே கீழ உப்பிலிகுண்டு புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு (வயது 54). விவசாயி. இவரது பேரன்கள் அஜித் (20), வீர மணிகண்டன் (8). இவர்கள் 3 பேரும் வக்கணாங்குண்டு கிராமத்தில் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி அவனியாபுரத்தை சேர்ந்த டிரைவர் கதிர்வேல் (40) என்பவர் ஓட்டி வந்த வேன், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அய்யாவு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் காயம் அடைந்த வீர மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com