கோத்தகிரியில் கராத்தே போட்டி: மழலையர் மாணவிகளுக்கு தங்கபதக்கம்

நீலகிரி மாவட்ட அளவிலான 11-வது ஆண்டு இந்தோ- ஜப்பான் ஷிட்டோரியூ கராத்தே போட்டி கோத்தகிரியில் நடந்தது. மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று சாதித்தனர்.
கோத்தகிரியில் கராத்தே போட்டி: மழலையர் மாணவிகளுக்கு தங்கபதக்கம்
Published on

கோத்தகிரி:

கோத்தகிரியில் நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம் (நாவா) தொண்டு நிறுவனம் நடத்தும் விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் சாதித்துள்ளது.

நீலகிரி மாவட்ட அளவிலான 11-வது ஆண்டு இந்தோ- ஜப்பான் ஷிட்டோரியூ கராத்தே போட்டி கோத்தகிரியில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இறுதிபோட்டியில் பங்கேற்ற நீலகிரி ஆதிவாசி நல சங்கம் (நாவா) தொண்டு நிறுவனம் நடத்தும் விக்டோரி ஆம்ஸ்ட்ராங் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகள் மவுனித், ஆதித்யா மற்றும் பவிக்ஷா ஆகியோர் “கட்டா” பிரிவில் தங்க பதக்கம் வென்று சாதித்தனர்.

இதுதவிர நான்கு மாணவர்கள் வெள்ளிபதக்கமும், ஒரு மாணவன் வெண்கல பதக்கமும் வென்றார். மேலும் குமித்தே பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் சரவணன் மற்றும் சுகாந்தினி ஆகியோர் தங்கப்பதக்கமும் மூன்று மாணவர்கள் வெள்ளி பதக்கமும் மற்றும் இரண்டு மாணவர்கள் வெண்கல பதக்கங்களும் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்ளுக்கு பள்ளி தாளாளர் ஆல்வாஸ் மற்றும் தலமை ஆசிரியை பூவிழி உட்பட்ட ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com