மதுரை அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது காரைக்குடி காளை

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெயிடை தோற்கடித்தது.
மதுரை அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது காரைக்குடி காளை
Published on

2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயிட் அணிகள் மோதின.

திருநெல்வேலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் காரைக்குடி காளை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் விஷால் வைத்தியா 65(51), அனிருத்தா 40(31) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஷாஜகான் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவிக் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை அடைந்தது. காரைக்குடி காளை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோகன் பிரசாந்த், ராஜ்குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com