கண்ணமங்கலம் அருகே நிலத்தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் தற்கொலை

கண்ணமங்கலம் அருகே நிலத்தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே நிலத்தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் தற்கொலை
Published on

கண்ணமங்கலம்:

ஆரணி அடுத்த தச்சூரை சேர்ந்தவர் சந்திரபாலன் (வயது 50). இவரது தம்பி தனபாலன் இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சந்திரபாலன் கடந்த 2016-ம் ஆண்டு தனபாலனை தம்பி என்றும் பார்க்காமல் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

ஆரணி போலீசார் சந்திரபாலனை கைது செய்தனர். இதன் வழக்கு விசாரணை ஆரணி கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபாலன் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் சந்திரபாலன் அம்மாபாளையம் அருகே உள்ள கல்லேரி என்ற இடத்தில் வி‌ஷம்குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வந்து பரிசோதனை செய்த போது சந்திரபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com