கண்ணமங்கலம் அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு

கண்ணமங்கலம் பகுதியில் ஒரே நேரத்தில் 2 கன்றுகளை பசு ஈன்றது. இது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
2 கன்றுகளை ஈன்ற பசு.
2 கன்றுகளை ஈன்ற பசு.
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பழைய ரோட்டில் நல்ல தண்ணீர் குளக்கரையில் குமார் என்பவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான பசு ஒன்று சினையாக இருந்தது. நேற்று மாலை அந்த பசு கன்று ஒன்றை ஈன்றது. சிறிது நேரத்தில் மற்றோரு கன்றையும் ஈன்றது. ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது. ஒன்று பசு, இன்னொன்று காளை. 2 கன்றுகளும் ஒரே நேரத்தில் தாய் பசுவின் மடியில் பால் உறிஞ்சும் காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

ஏற்கனவே 7 முறை கன்றுகளை ஈன்ற இந்த பசு தற்போது 8-வது பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்றது மிகவும் அதிசயமாக உள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com