காங்கயம் அருகே ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை

காங்கயம் அருகே ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கயம் அருகே ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை
Published on

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் மன்றாடியார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (46) ஆட்டோ டிரைவர். இவரது மகள் சத்திய பிரியா. இவர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கவுதமை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 8 மாதத்திற்கு முன் இந்த திருமணம் நடைபெற்றது.

சத்திய பிரியா தனது கணவரிடம் தனிக் குடித்தனம் செல்லலாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் அவருக்கும் மாமியாருக்கும் தகராறு உருவானது. இதனை அறிந்த சத்திய பிரியாவின் தந்தை தங்கவேல் அங்கு சென்று கவுதம் தந்தை முருகேசனிடம் கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு உருவானது.

இந்த நிலையில் தங்கவேல் தனது ஆட்டோ ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கவுதம் தந்தை முருகேசன் வந்தார். இருவருக்கும் மீண்டும் தகராறு உருவானது.

இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் தான் வைத்திருந்த கத்தியால் ஆட்டோ டிரைவர் தங்கவேல் வயிற்றில் சரமாரி குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முருகேசனை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com