காஞ்சிபுரம் அருகே கத்திமுனையில் ரூ.81 ஆயிரம் பறிப்பு

காஞ்சிபுரம் அருகே கத்திமுனையில் ரூ.81 ஆயிரம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிப்பு
பணம் பறிப்பு
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு வந்து நகையை அடமானம் வைத்தார். நகை அடமானம் வைத்த ரூ.81 ஆயிரத்தை வாங்கி கொண்டு வெளியே வந்த அவர் மாமனார் மேகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயந்தியும் அமர்ந்திருந்தார்.

காஞ்சிபுரம் அம்பாள் நகர் சந்திப்பு அருகே செல்லும்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மேகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி ஐஸ்வர்யாவை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 81 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து ஐஸ்வர்யா, பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து கத்திமுனையில் பணத்தை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com