காஞ்சிபுரத்தில் கத்தியுடன் 5 பேர் கைது

காஞ்சிபுரத்தில் கத்தியுடன் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம். மடம் தெரு அருகே உள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 5 பேரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் இன்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்தார். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறினர்.

இது தொடர்பாக பிரவீன், கார்த்திகேயன், மகேஷ், விசுவநாதன், புல்லட் தீபக் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்தி, 4 உருட்டு கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com