காஞ்சிபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் பலி

காஞ்சிபுரம் அருகே அதிக அளவில் மது குடித்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது குடித்தவர் பலி
மது குடித்தவர் பலி
Published on

காஞ்சிபுரம் மின்நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் குருசந்திரன் (வயது 45). கடையில் வேலை செய்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்த குருசந்திரன் காஞ்சிபுரம் ரெயில்வே ரோடு பகுதியில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி பாண்டீஸ்வரி பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com