காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 50). சைக்கிளில் சென்று சமோசா, ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். சிங்காரவேல் பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு என்ற இடத்தில் நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தொட்டியில் குளிக்க செல்வது வழக்கம்.

அதே போல் நேற்று காலை குளிக்க சென்றார். நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில், அந்த இடத்தில் மின்கம்பம் சாய்ந்து கிடந்தது. இதை கவனிக்காத சிங்காரவேல் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் விடுவதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார்.

அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த சிங்காரவேலுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், கீதா என்ற மகளும் உள்ளனர்.

இதுகுறித்து பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com