அத்திவரதர் உற்சவத்தில் நாளை முதல் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் - மாவட்ட ஆட்சியர்

காஞ்சீபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில் நாளை முதல் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் பொன்னையா
ஆட்சியர் பொன்னையா
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காஞ்சீபுரத்தில் இன்று மதியம் 1 மணி வரை அத்திவரதரை சுமார் 1.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று அத்திவரதரை தரிசிக்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 33 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 20,000 பக்தர்களை நிறுத்தி வைத்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்க முடிவுசெய்துள்ளோம்.

அத்திவரதர் உற்சவத்தில் நாளை முதல் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களுக்கு காலை 5 மணி முதலே அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 27 நாளில் 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com