அத்திவரதருக்கான விஐபி தரிசனம் நாளை மறுதினம் ரத்து - ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை காண வரும் விஐபி தரிசனம் நாளை மறுதினம் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் பொன்னையா
ஆட்சியர் பொன்னையா
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அத்திவரதரை இதுவரை 89.75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் தரிசனத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நாளை 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது. 17-ம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படும். ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.

அனைத்துத் துறை ஊழியர்களும் சிறப்பாக, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் காவல் துறையின் பங்களிப்பு முக்கியமானது, போக்குவரத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com