காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியது- 2 வாலிபர்கள் பலி

காஞ்சீபுரத்தில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (20). சிதம்பரத்தில் உள்ளஒரு வாட்டர் சர்வீஸ் ஸ்டேசனில் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று தனது பெற்றோர் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்கு சொந்த ஊர் காஞ்சீபுரம் வந்தார். இரவு 7 மணிக்கு தனது நண்பர் சந்தோஷை மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டார். நசரப்பேட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற கனரக லாரியை முந்த முயன்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகன், சமோதஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி நிற்காமல் அதிவேகமாக சென்று விட்டது.

தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர்களின் உடல்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com