கம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை

கம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை
Published on

கம்பம்:

கம்பம் வடக்குபட்டி 5-வது தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கவினேஷ் (வயது 10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை வீட்டை விட்டு விளையாட செல்வதாக கூறிச் சென்ற கவினேஷ் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாயமான மாணவனை தேடி வந்தனர்.

இன்று காலை காமையகவுண்டன் பட்டியில் டாஸ்மாக் கடை இருந்த பகுதியில் ஒரு சிறுவன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது கவினேஷ் என தெரிய வந்தது.

அவனது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயம் இருந்தது. மேலும் அவனது கால்சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சிறுவன் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப முன் விரோதம் காரணமாக சிறுவனை யாரேனும் கடத்தி கொன்றார்களா? அல்லது பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com