விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்ஜிக்கள் உணரவேண்டும் - கமல்ஹாசன் டுவிட்

விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்ஜிக்கள் உணரவேண்டும் என கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்ஜிக்கள் உணரவேண்டும் - கமல்ஹாசன் டுவிட்
Published on

சென்னை:

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் அரசியலை விமர்சித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், மக்கள் உயிரிழப்பதை பற்றி கவலைப்படாமல் புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசியல்வாதிகள் விரைவில் தோல்வியடைவார்கள். சாதாரண மக்களைப்பற்றி கவலைப்படாத அரசு அதிக நாட்கள் ஆட்சியில் நீடிக்காது. விபத்துகள் நிகழ வழி செய்வதும், கொலைக்கு உடந்தையாக இருப்பதும் ஒன்று என்பதை தமிழக பேனர்-ஜிக்கள் உணர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டில் கூறியிருப்பதாவது:-

உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும்

இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com