கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கேட்டால் துணைவேந்தரை கொடுத்திருக்கிறார்கள் - கமல்ஹாசன்

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கேட்டால் துணைவேந்தரை கொடுத்திருக்கிறார்கள் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து நடிகர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். #kamalhassan #cauveryissue
கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கேட்டால் துணைவேந்தரை கொடுத்திருக்கிறார்கள் - கமல்ஹாசன்
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது குறித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்தார்.

இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். அதில், 'கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?' என பதிவு செய்துள்ளார். #kamalhassan #cauveryissue

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com