எல்ஜிபிடி பேரணியில் அமெரிக்க எம்பி கமலா ஹாரிஸ் உற்சாக நடனம்

அமெரிக்காவில் நடைப்பெற்ற எல்ஜிபிடி சமூகத்தினரின் பேரணியில் அமெரிக்க எம்பியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் உற்சாக நடனமாடியுள்ளார்.
கமலா ஹாரிஸ், எல்ஜிபிடி சமூகத்தினருடன் உற்சாக நடனம்
கமலா ஹாரிஸ், எல்ஜிபிடி சமூகத்தினருடன் உற்சாக நடனம்
Published on

அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார்.

மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது.

எனவே அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனையடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களுக்கான போட்டியில் இவரது பெயரும் இடம் பெற்றது.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று எல்ஜிபிடி சமூகத்தினர் நடத்திய ‘ப்ரைட் பரேட்’ பேரணியில் கமலா ஹாரிஸ் கலந்துக் கொண்டார்.

மேலும் வானவில்லைப் போன்ற வண்ண நிறங்களுடன் சட்டை அணிந்து, மேடையில் பேசி, பின்னர் அவர்களுடன் சேர்ந்து உற்சாக நடனமாடினார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com