மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியில் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியை தான் வகிக்க உள்ளதாகவும், ஆட்சியாளர்கள் செய்யாமல் விட்ட பணிகளை செய்வதுதான் தங்கள் கொள்கை என்றும் கமல் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியில் கமல்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் கட்சியின் கொள்கைகள் குறித்து பலர் கேட்கிறார்கள். ஆட்சியாளர்கள் என்னென்ன செய்யவில்லையோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை. அடுத்த மாத மத்தியில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம் தொடங்கப்படும்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியை நான் வகிப்பேன். எங்கள் கட்சியில் திராவிடத்தையும் தேசியத்தையும் நாங்கள் விலக்கவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com