நான் தலைவன் அல்ல, மக்களின் கருவி- புதிய கட்சி தொடங்கிய கமல் பேச்சு

கட்சியின் பெயரை அறிவித்த கமல், தான் கட்சியின் தலைவன் அல்ல என்றும் மக்களின் கருவி என்றும் பேசினார். #KamalsPoliticalEntry #makkalneedhimaiam #kamalpartyname
நான் தலைவன் அல்ல, மக்களின் கருவி- புதிய கட்சி தொடங்கிய கமல் பேச்சு
Published on

மதுரை:

மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த கமல், கட்சியின் பெயரை ‘மக்கள் நீதி மய்யம்’ என அறிவித்தார்.  

அப்போது அவர் பேசும்போது, ‘நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்தவர்களின் கை விரல் சுடும்’ என்றார்.

இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது; இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி. தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும்’ என்றும் கமல் கூறினார்.

அதன்பின்னர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு அறிவிக்கப்பட்டார்.  #tamilnews #KamalsPoliticalEntry #makkalneedhimaiam #kamalpartyname #madurai

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com