நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை பிச்சைக்காரர்கள் என்று தரக்குறைவாக பேசிய நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
Published on

தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி இன்று ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை திருடர்கள் என்றும், பிச்சைக்காரர்கள் என்றும் தரக்குறைவாக பேசிய நடிகர் கமலஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை. இவர் அரசியலுக்கு வந்தால் 5 சதவீதம் கூட தேர்ச்சி பெற முடியாது.

அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு இருந்த ரஜினி இவர் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் அரசியலுக்கு வந்து விட்டார். அந்த எரிச்சலில் கமலஹாசன் என்னமோ பேசுகிறார். அவர் இன்னும் அரசியலில் முளைக்கவில்லை.

அவர் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும். அவர் மன்னிப்பு கேட்கும்படியான சூழ்நிலையை உருவாக்கும் வரை அவருக்கு எதிரான எங்கள் நடவடிக்கை தொடரும். எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரன் அனுமதியைப் பெற்று அவருக்கு எதிராக போராடுவோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com