கழுகுமலையில் கொத்தனார் மீது தாக்குதல் - வாலிபருக்கு வலைவீச்சு

கழுகுமலையில் கொத்தனாரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

கழுகுமலை:

கழுகுமலை கீழ தெரு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணி மகன் ஆனந்த் (வயது 32), கொத்தனார். இவருக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜெபாஸ்டின் மகன் ஆபிரகாம்(32) என்பவருக்கும் இடையே கழுகுமலையில் நடந்த துக்க நிகழ்ச்சியில் வைத்து தகராறு ஏற்பட்டது.

பின்னர் உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது ஆனந்த், ஆபிரகாம் உறவினரான கோட்டைச் சாமி என்பவரிடம் குடித்து விட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆபிரகாம் அங்கு கிடந்த மண் வெட்டியை எடுத்து ஆனந்த்தின் தலையில் வெட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் ஆபிரகாம் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து ஆனந்தை அவரது உறவினர்கள் கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆபிரகாமை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com