கல்லாமொழி அருகே நிர்வாண நிலையில் ஆண் பிணம்

உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி பதுவைநகர் கடற்கரையையொட்டி நிர்வாண நிலையில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்க தக்க ஆண் பிணம் கிடந்தது.
கல்லாமொழி அருகே நிர்வாண நிலையில் ஆண் பிணம்
Published on

உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி பதுவைநகர் கடற்கரையையொட்டி நிர்வாண நிலையில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்க தக்க ஆண் பிணம் கிடந்தது.

கருப்பு நிறம், தாடி வைத்துள்ளார். அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இது குறித்து உடன்குடி கிராம நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்தவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com