களியக்காவிளை அருகே வெடிவச்சான் கோவிலில் திடீர் தீ: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலை பகுதியில் உள்ள வெடிவச்சான் கோவிலில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வெடி விபத்து நடந்த கோவிலில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.
வெடி விபத்து நடந்த கோவிலில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.
Published on

திருவனந்தபுரம்:

களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் பாலராமபுரம் பகுதியில் வெடிவச்சான் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு வெடி நேர்ச்சை செலுத்துவது வழக்கம். இதற்காக கோவிலுக்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

அங்கிருந்து வெடி தயாரிக்கப்பட்டு நேர்ச்சை செலுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும். நேற்று மதியமும் இதுபோல ஊழியர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென வெடி பொருள் வைத்திருந்த அறையில் தீ பிடித்தது. இதில், அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியது.

இதைக்கண்ட ஊழியர் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீ மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் வெடி பொருட்கள் இருந்த அறை முற்றிலும் தகர்ந்தது.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com