கலசபாக்கம் அருகே வெயில் கொடுமைக்கு பெண் பலி

கலசபாக்கம் அருகே வெயில் கொடுமைக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலசபாக்கம் அருகே வெயில் கொடுமைக்கு பெண் பலி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதனால் வெளியில் கூட செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

நேற்றும் கடுமையான வெயில் வாட்டியது. 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. கலசபாக்கம் அருகே உள்ள கீழ்பாலூரை சேர்ந்தவர் மண்ணு இவரது மனைவி சின்னபாப்பா (வயது 45). இவர் நேற்று கீழ்பாலூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கடுமையான வெயிலால் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சின்னபாப்பா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com