களக்காடு அருகே டிரைவர் மீது தாக்குதல்

களக்காடு அருகே டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நாகன்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சேதுராஜன் (வயது 52). இவர் கியாஸ் ஏஜென்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சிவா பைக்கில் வேகமாக வந்ததுடன், சேதுராஜன் மீது மோதுவது போல் வந்தார்.

இதைப்பார்த்த சேதுராஜன், சிவாவிடம் பைக்கில் இடிப்பது போல் வரலாமா என தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவா சேதுராஜனை அவதூறாக பேசி தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com