களக்காடு அருகே வாகனம் மோதி விவசாயி படுகாயம்

களக்காடு அருகே வாகனம் மோதி விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு காலனி தெருவை சேர்ந்தவர் வேல்மயில் மகன் ஆல்வின் துரை (45), விவசாயி. இவர் சம்பவத்தன்று மாவடிக்கு சென்று விட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கடம்போடுவாழ்வு கோழிப்பண்ணை அருகே வந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ ஆல்வின் துரையின் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் ஆல்வின் துரை படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com