காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள் பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் போலீசில் தஞ்சம்

காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள், பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். #KaduvettiGuru #Daughter #Marriage
போலீஸ் நிலையத்துக்கு காடுவெட்டி குரு மகள் மணக்கோலத்தில் வந்தபோது எடுத்த படம்.
போலீஸ் நிலையத்துக்கு காடுவெட்டி குரு மகள் மணக்கோலத்தில் வந்தபோது எடுத்த படம்.
Published on

கும்பகோணம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

பின்னர் மனோஜ்கிரண் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான்(மனோஜ்கிரண்), காடுவெட்டி குருவின் தங்கை மகன். நானும் விருத்தாம்பிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு காடுவெட்டி பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #KaduvettiGuru #Daughter #Marriage

X

Maalai Malar
www.maalaimalar.com