கடையம் அருகே வேன் மோதி தொழிலாளி பலி

கடையம் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
கடையம் அருகே வேன் மோதி தொழிலாளி பலி
Published on

கடையம்:

தென்காசி அருகே உள்ள கீழபுலியூரை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது41), கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பைக்கில் கடையம் அருகே உள்ள அய்யம்பிள்ளை குளம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த வேன் மோதி படுகாயம் அடைந்தார். 

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் நம்பிராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com