கடத்தூர் அருகே ஓடும் பஸ்சின் டயர் கழன்றதால் பரபரப்பு

கடத்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க டயர் திடீர் என கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டயர் கழன்ற அரசு டவுன் பேருந்து.
டயர் கழன்ற அரசு டவுன் பேருந்து.
Published on

கடத்தூர்:

தருமபுரியில் இருந்து கடத்தூர் வழியாக கேத்துரெட்டிபட்டிவரை செல்லும் டவுன்பேருந்து தினந்தோரும் சென்று வருகிறது. நேற்று காலை கடத்தூரில் இருந்து கேத்துரெட்டிப்பட்டி நோக்கி வழக்கம்போல் புறப்பட்டது. 

இந்த நிலையில் வெங்கடதார அள்ளிபுதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் தீடீர் என கழன்றது. இதைஅறிந்த பேருந்தின் டிரைவர் சாமர்த்தியமாக பேருந்தை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் 100 மீட்டர் தூரம் வரைசென்று பேருந்தின் டயர் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com