கடத்தூர் மார்க்கெட்டில் ஒரு மூட்டை வெற்றிலை 20 ஆயிரம் வரை விற்பனை

கடத்தூர் பகுதியில் அதிக அளவு வெற்றிலை பயிர் செய்துள்ளனர். மார்க்கெட்டில் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெற்றிலை வாங்க குவிந்த வியாபாரிகள்.
வெற்றிலை வாங்க குவிந்த வியாபாரிகள்.
Published on

கடத்தூர்:

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் அதிக அளவு வெற்றிலை பயிர் செய்துள்ளனர். இதனால் கடத்தூர் வெற்றிலை மார்க்கெட்டில் அதிகபட்சமாக 20 ஆயிரம் வரை ஒரு மூட்டை வெற்றிலை விற்பனையானது. 

கடத்தூர்  பகுதியில் உள்ள முத்தனூர், அஸ்தகிரியூர், வெள்ளியங் கிரி, மதனா, புரிகோம்பை, மோட்டாங்குறிச்சி, காவேரிபுரம், பெத்தானூர் உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்பொழுது பனி காரணமாக வரத்து குறைந்து உள்ள நிலையில் வெற்றிலை விலை ஏற்றம் அடைந்துள்ளது. குறைந்த அளவாக ஒரு மூட்டை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com