கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலத்துக்காக 17 வீடுகள் இடிப்பு

திருவள்ளூரை அடுத்து கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக இன்று 17 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலத்துக்காக 17 வீடுகள் இடிப்பு
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்து கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2015-ம் ஆண்டு ரூ.14.85 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டன. கடம்பத்தூரில் இருந்து ரெயில்வே கேட் வரை மேம்பாலம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

ரெயில்வே கேட்டில் இருந்து ஊராட்சி அலுவலகம் வரை ரெயில்வே மேம்பாலம் அமைக்க 17 வீடுகளை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்றதால் வழக்கு நடந்து வருகிறது.

இதில் வீட்டின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ரூ.98 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டது.

இதையடுத்து 17 வீடுகளையும் இன்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வீடுகளை அகற்றும் பணி நடந்ததால் அப்பகுதியில் 20 தெருக்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com