கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்

கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

திருவள்ளூர்:

கடம்பத்தூர் பெரிய தெருவை சேர்ந்தவர் மணி. தனியார் கம்பெனி ஊழியர். இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்று இருந்தார்.

மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதேபோல் அருகில் உள்ள சரஸ்வதி என்பவரது வீட்டில் ரூ. 4,500 கொள்ளை போனது. இவரது வீட்டு அருகே உள்ள பாலு என்பவரது வீடு மற்றும் தொலைத் தொடர்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஒரே நாளில் 4 இடங்களில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com