கடம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவன் பலி

கடம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவன் பலி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூரை சேர்ந்தவர் ரகு. இவரது மகன் ரோகித் குமார் (வயது 9).

கீழ்நல்லாத்தூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மாதம் 29-ந்தேதி முதல் ரோகித்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து அவனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது.

ரோகித்குமாரின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று அதிகாலை அவன் சிகிச்சை பலனின்று பரிதாபமாக இறந்தான்.

X

Maalai Malar
www.maalaimalar.com