கபிஸ்தலம் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவன் தற்கொலை

கபிஸ்தலம் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் அடுத்த திருவிஜயமங்கை தெற்கு தெருவில் வசிக்கும் பரமசிவம் மகன் வெங்கடேசன் (வயது 34) தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் அவரது மனைவி அடிக்கடி அவரிடம் கோபித்துக் கொண்டு தனது சொந்த ஊரான அரியலூர் சென்றுவிட்டார். பலமுறை குடும்பம் நடத்த மனைவி அழைத்தும் மனைவி வராததால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

இதனைக்கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது அண்ணன் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com