கபிஸ்தலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

கபிஸ்தலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் செட்டி தெருவில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 57) விவசாயி. இவர் கடந்த 29-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் சுகுமார் (32) கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com