கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள பவுண்டு பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் மனைவி சகுந்தலா என்கின்ற அம்புஜம் (வயது 65), விவசாயக் கூலி.

இவர் கடந்த 9-ம் தேதி மாலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இரவு வரை அவர் வீடு திரும்பாததால் போலீசாருக்கும், கபிஸ்தலம் போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவரை காவிரி ஆற்று பகுதியில் தேடினர் நள்ளிரவு கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் காவிரி ஆற்றின் ஓரத்தில் சகுந்தலாவின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது மகன் ஆனந்தம் (40) கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com