

புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், அடுத்த மாதம் 27-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான தீபக் மிஸ்ரா பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு ஜே.எஸ்.கேஹர் சிபாரிசு செய்துள்ளார். இத்தகவலை மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பு ஏற்கிறார்.
அவர் 1977-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார். 1996-ம் ஆண்டு, ஒடிசா ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மத்தியபிரதேசம், பாட்னா, டெல்லி ஐகோர்ட்டுகளில் பணியாற்றிய பிறகு, 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆனார். தலைமை நீதிபதி பதவியில் இருந்து அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அவர் ஓய்வு பெறுவார்.