நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது - எச்.ராஜா முறையீடு

உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என எச்.ராஜா தரப்பு இன்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது -  எச்.ராஜா முறையீடு
Published on

விநாயகர் சிலை ஊர்வலத்தில்  பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா 4 வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இல்லை என எச்.ராஜா தரப்பில் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்  ரமானியிடம் முறையிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com