குழந்தை சுர்ஜித் மீட்க வேண்டி திருவாரூர் பேராலயத்தில் கூட்டு பிரார்த்தனை

குழந்தை சுர்ஜித் மீட்க வேண்டி திருவாரூரில் உள்ள புனித அன்னை பாத்திமா பேராலயத்தில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சுர்ஜித்
சுர்ஜித்
Published on

திருவாரூர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டி எனும் கிராமத்தில் குடிநீருக்காக தோண்டப்பட்ட 600 அடி ஆள்துளை கிணற்றில் சுர்ஜித் என்ற 2வயது குழந்தை தவறி விழுந்தான்.

கடந்த 3 நாட்களாக குழந்தையை மீட்கும் பணியில்10-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என சம்பவ இடத்தில் முகாமிட்டு தொடர்ந்து குழந்தை மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சுர்ஜித் மீண்டும் வர வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், ஆலயங்களில் சர்வமத பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக திருவாரூரில் உள்ள புனித அன்னை பாத்திமா பேராலயத்தில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அப்போது சுர்ஜித் மீண்டு வர வலியுறுத்தி பிரார்த்தனை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com