ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: 3-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 100/4

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரையில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #JohannesburgTest
ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: 3-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 100/4
Published on

ஜொகன்னஸ்பர்க்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 187 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அம்லா 61 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவை விட 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய் உடன் பார்தீப் பட்டேல் களம் இறங்கினார். அதிரடியாக விளையாட நினைத்த பார்தீவ் பட்டேல் 15 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 13 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

42 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா அணி இன்று தொடர்ந்து விளையாடியது. ராகுல் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் விஜய்யுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். விஜய் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. 

அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து மூன்றாம் நாளின் இரண்டாவது செஸ்சன் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 39 ரன்களுடனும், ரகானே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #SAvIND #JohannesburgTest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com