

பெனால்டி ஷூட்அவுட்டால் இந்தியாவின் வெற்றி 27 வயதான விக்கெட் கீப்பர் சவிதா கையில் இருந்தது. ‘பெனால்டி ஷூட்அவுட்’டில் சீனாவின் முயற்சியை ஒருமுறை முறியடித்தார். அதேபோல் சீன கீப்பரும் ஒருமுறை இந்தியாவின் முயற்சியை முறியடித்தார். இதனால் ஸ்கோர் 4-4 என டைஆனது.
ஆகவே, ‘சடன்டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த முறையில் இரு அணி வீரர்களும் மாறிமாறி கோல் அடிக்க வேண்டும். எந்த அணி கீப்பர் தடுக்கிறாரோ? அந்த வெற்றி பெற்றதாக கருதப்படும்.
அதில் சீன வீராங்கனை அடித்த பந்தை சவிதா அபாரமாக தடுத்தார். இதனால் இந்தியா 5-4 என பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி பெற்றது. வெற்றி ராணியான சவிதாகவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறார்.
ஆனால் 9 வருடமாக இந்திய அணிக்காக விளையாடி வரும் தனக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை என்று சோகத்தை தெரிவித்துள்ளார் சவிதா.
இதுகுறித்து கோல் கீப்பர் சவிதா கூறுகையில் ‘‘இந்திய அணி வெற்றியில் தனது பங்களிப்பு இருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடின உழைப்பின் மூலம் அதிக அளவில் கௌரவம் கிடைத்துள்ளது. வேலையில்லாமல் இருப்பது என்னுடைய ஆட்டத்தை ஒருபோதும் பாதித்ததில்லை.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக வேலைக்காக முயற்சி செய்து வருகிறேன். ஹரியானா அரசின் ‘‘மெடல் லயோ, நாகுரி பயோ’’ திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளால் உத்தரவாதத்தை மட்டுமே பெற்றுள்ளேன்.