டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று முதுகலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Published on

புதுடெல்லி:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள படிக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டவாறு ஒரு மாணவர் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு இன்று காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் அளித்தனர்.

விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாணவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு பட்டதாரி என்ற முதல்கட்ட தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த மாணவர் பெயர் ரிஷி ஜோஷ்வா (24) என்பதும் அவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் இன்றிரவு தெரியவந்தது.

எம்.ஏ. ஆங்கிலம் பயின்றுவந்த ரிஷி ஜோஷ்வா, சில நாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நேற்றைய செமஸ்ட்டர் தேர்வை எழுதாமல் தவறவிட்டதாகவும் அவரது சகமாணவர்கள் தெரிவித்தனர்.

தனது மரணத்துக்கான காரணத்தை ஆங்கில பேராசிரியர் ஒருவருக்கு ஏற்கனவே அவர் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com