காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள பலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் படுகாயம்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் செக்டாரின் மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்தினர். 

மோட்டார் குண்டுகள், தானியங்கி ஆயுதங்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் நசீம் ஜைதி என்ற 35 வயதுமிக்க பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரது வீட்டிற்கு அருகிலேயே ஷெல் குண்டுகள் விழுந்தது. காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தண்ணீர் டேங் ஒன்றும் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

அதிகாலை 4.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அறிவிக்கப்படாத தாக்குதலில் ஈடுபட்டதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானை ஒட்டியுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com