காஷ்மீரில் பாக். அத்துமீறி தாக்குதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பொதுமக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பாக். அத்துமீறி தாக்குதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி
Published on

ஸ்ரீநகர்: 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒருமுறை அத்துமீறி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டிய குல்புர் பகுதியில் காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மற்றும் சக்கா தா பாக், கர்ரி கர்மாரா பகுதி கிராமாங்களை குறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில், பொதுமக்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

சர்வதேச விதிமுறைகளை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இந்திய வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

முன்னதாக, பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு வாகனங்களை குறிவைத்து நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com