ஜம்மு காஷ்மீர்: பேருந்து விபத்து - பெண் உட்பட 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர்: பேருந்து விபத்து - பெண் உட்பட 3 பேர் பலி
Published on

காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் இன்று காலை மினி பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானது.

மினி பேருந்தானது செக்வால் கிராமத்திலிருந்து சம்பா நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ரக்கா அம்பதி பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இன்று காலை சுமார் 8:20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com