அமர்நாத் குகை கோவிலில் காஷ்மீர் கவர்னர் வழிபாடு

ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் அமர்நாத் குகை கோவிலில் இன்று பனி லிங்கத்தை தரிசித்து வழிபாடு செய்தார்.
காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்
காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். கடல்மட்டத்தில் இருந்து மூன்றாயிரத்து 880 மீட்டர் உயரத்தில் தோன்றும் இந்த பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, பாகல்காம் மற்றும் பல்தல் ஆகிய மலைப்பாதைகள் வழியாக குகைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு அமர்நாத் தரிசனக் காலத்தையொட்டி குகைக்கோயில் இன்று காலை திறக்கப்பட்டது. முதல்நாளான இன்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னருமான சத்யபால் மாலிக் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசித்து வழிபாடு செய்தார்.

யாத்ரீகர்கள் வருகையையொட்டி அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவர்னர் ஆய்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com