ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகையின் கீழ் 20 சதவிகிதம் கூடுதல் டேட்டா அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ஊக்குவிக்க புதிய சலுகை அறிவித்துள்ளது. புதிய சலுகை தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகையின் கீழ் 20 சதவிகிதம் கூடுதல் டேட்டா அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

ரிலையன்ஸ் ஜியோவின் லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ஊக்குவிக்க ஜியோ புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகையின் கீழ் லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 20 சதவிகிதம் கூடுதல் 4ஜி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகை 10 லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. எர்த் 1, எர்த் 2, வாட்டர் 1, வாட்டர் 7எஸ், வாட்டர் 8, வாட்டர் 10, வாட்டர் 11, எஃப்1, எஃப்1எஸ் மற்றும் விண்ட் 4எஸ் உள்ளிட்டவற்றிற்கு வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.6,600 முதல் ரூ.9,700 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை ஜூன் 9, 2017 முதல் ரீசார்ஜ் செய்து பெற முடியும். 

புதிய சலுகை திட்டத்தின் வேலிடிட்டி ஜூன் 9, 2017 முதல் மார்ச் 31, 2018 வரை ஆகும். இந்த சலுகையை பெற வாடிக்கைாளர்கள் ஏற்கனவே ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் டேட்டா ஸ்மார்ட்போன் வாங்கிய 48 மணி நேரத்தில் கிரெடிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ரூ.309 அல்லது ரூ.409 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன்படி ரூ.309 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்வோருக்கு வழக்கமாக 28 ஜிபி டேட்டாவுடன் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.509 திட்டத்தில் 12 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது, வழக்கமாக ரூ.509 திட்டத்தில் 56 ஜிபி டேட்டா வழங்கப்படும். கூடுதல் டேட்டா முதல் ஆறு ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com