

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வரும் 29-ம் தேதி முதல் மந்திரியாக பதவி ஏற்கும் ஹேமந்த் சோரன் விமானம் மூலம் இன்றிரவு டெல்லி வந்தார்.